ஆயிரத்து நூறு கோடி கோரி குறை நிரப்பு பிரேரணையை சமர்ப்பித்தது அரசாங்கம்

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்

ஆயிரத்து 100 கோடியே 74 இலட்சத்து 75 ஆயிரத்து 445 ரூபா நிதிக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி கோரி குறை நிரப்பு பிரேரணையொன்றை அரசாங்கம் நேற்று சபையில் சமர்ப்பித்துள்ளது.

சபை முதல்வரும் அமைச்சருமான லகஷ்மன் கிரியெல்லவினால் இந்த குறை நிரப்பு பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்களிலான மேலதிக செலவினங்களை ஈடுசெய்வதே இந்த குறைநிரப்பு பிரேரணை ஊடாக அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதுளுவாவே சோபித தேரரின் நினைவு தூபியொன்றை நிர்மாணிப்பதற்கு 3,00,00,000 ரூபா.

விவசாய அமைச்சின் வாடகைகள் மற்றும் உள்நாட்டு வரிகள் தொடர்பான செலவினங்களை ஈடு செய்ய மேலதிக நிதி ஒதுக்கீடாக 6,60,40,000 ரூபா.

கடன் மிதப்பு செலவினங்களுக்கான ஏற்பாடுகளின் பற்றாக்குறைகளை ஈடு செய்வதற்கு திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தினால் செலுத்தப்பட்ட 167,29,00,000 ரூபா.

யாசகம் செய்வோரை புனர்வாழ்வளிப்பதற்கு ரிதியகம தடுப்பு நிலையத்தின் செலவினங்களை ஈடு செய்வதற்கு தென்மாகாண சபையினாலும் 1,00,00,000 ரூபா இந்த மதிப்பீட்டில் கோரப்பட்டுள்ளது.