இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் பிரதமர் விசேட உரை

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அவர் இவ்வாறு உரையாற்ற உள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பலத்த காற்று, மழை வெள்ளம் மற்றும் கடுமையான வறட்சி குறித்து பிரதமர் நாளைய தினம் நாடாளுமன்றில் விசேட உரையாற்ற உள்ளார்.

நாட்டின் விவசாயத் துறைக்கு இந்த இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை அனர்த்தங்களினால் அரிசி மற்றும் தேங்காய் என்பனவற்றின் விலை உயர்வு தொடர்பில் பிரதமர் விளக்கம் அளிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், விலை ஏற்றத்தினால் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்ப்பது தொடர்பிலும் பிரதமர் விளக்கம் அளிக்க உள்ளதாக குறிப்படுகின்றது.