அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு நன்றி கூறிய கூட்டமைப்பு!

Report Print Murali Murali in பாராளுமன்றம்

வடமாகாணத்திற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன பாரிய சேவையொன்றை செய்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாம் நன்றி கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் வடமாகாணத்திற்கு 14 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது வடமாகாணத்திற்கு செய்யப்பட்ட பாரிய சேவையாகும்.

இதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக தாம் நன்றி கூறிக்கொள்கின்றேன். எவ்வாறாயினும், வடமாகாணத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதியில் மன்னார் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.