நாடாளுமன்ற கூட்டங்களை சீர்குலைக்க திட்டம்

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

நாடாளுமன்றத்தில் கடந்த 10 ஆம் திகதி மேற்கொண்டது போல், அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டங்களை சீர்குலைக்க திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக புலனாய்வுப் பிரிவுகளின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த திட்டம் குறித்த தகவல்கள் அரசாங்கத்தில் பொறுப்புமிக்க தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் கடந்த 10 ஆம் திகதி நடந்த மோதல் சம்பந்தமாக புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போது இந்த திட்டம் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதேவேளை நாடாளுமன்றத்தில் கடந்த 10 ஆம் திகதி நடந்த மோதல் சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சபாநாயகரின் அலுவலகம், அன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை குழப்ப திட்டமிடுள்ளதாக நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்திருந்ததாக கூறியுள்ளது.

பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனவரி 17 ஆம் திகதி வழங்குவதாக ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய சபைக்கு அறிவித்த பின்னரும், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் அறிக்கையை வழங்குவதாக உறுதியளித்திருந்தாக கூறி தொடர்ந்தும் தவறான முறையில் நடந்துக்கொண்டு, நாடாளுமன்றத்தின் பணிகளுக்கு தடையேற்படுத்தினார்.

அத்துடன் தினேஷ் குணவர்தன உட்பட சிலரின் தூண்டுதலால் சபை நடுவுக்கு வந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டப்படி பிரதமரின் தடையேற்படுத்தி, சபை நடவடிக்கைகளை சீர்குலைத்ததாக சபாநயகரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.