மத்திய வங்கியின் பிணை முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளது.
கடந்த 6ஆம் திகதி இது தொடர்பான முதலாவது விவாதம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், இன்றும், நாளையும் குறித்த விவாதங்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ளன.
பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சி தலைவர்களின் கூட்டம் ஒன்று இடம்பெற்று, அதில் பிணை முறி மோசடி தொடர்பில் 3 நாட்கள் நாடாளுமன்ற விவாதம் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.