விஜயகலாவின் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை! செங்கோலை எடுத்துச் செல்ல முயன்றதாக குற்றச்சாட்டு

Report Print Sujitha Sri in பாராளுமன்றம்

நாடாளுமன்றில் வைத்து செங்கோலை எடுத்துச் செல்ல முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில் பிரசன்ன ரணவீர எம்.பியிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் நாளைய தினம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கில் பெண்களும் சிறுவர்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்தால் கடந்த 3ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இது தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்த போது ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு என அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் பல முறை தெரிவித்த போதும் யாரும் அதை கேட்காமல் கூச்சலிட்டதால் சபை நடவடிக்கையை சபாநாயகர் ஒத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவில் முன்னிலையாகுமாறு பிரசன்ன ரணவீர எம்.பிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.