பரபரப்பை ஏற்படுத்திய செய்தி தொடர்பில் ஒரு நாள் விவாதம்

Report Print Aasim in பாராளுமன்றம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த குறித்து நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி குறித்து நாடாளுமன்றத்தில் ஒருநாள் விவாதம் நடத்தப்பட உள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிறுவனம் ஒன்றிடமிருந்து 7.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை மஹிந்த தரப்பினர் பெற்றுக் கொண்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் அண்மையில் வெளியான செய்தி பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

இது குறித்து நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் ஒருநாள் விவாதம் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியே இது தொடர்பான பிரேரணையை முன்வைத்துள்ளது.

நாடாளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணையாக முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைக்கு அமைவாக எதிர்வரும் வியாழக்கிழமை முழுநாளும் நியூயோர்க் டைம்ஸ் செய்தி குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.