ஆவா குழு ஒன்றும் தீவிரவாத அமைப்பு கிடையாது!

Report Print Murali Murali in பாராளுமன்றம்

யாழில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஆவா குழு ஒன்றும் தீவிரவாத அமைப்பு கிடையாது என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆவா குழுவின் தலைவரை கைது செய்த போது, தன்னை விடுதலை செய்யுமாறு கோரி கண்ணீர் விட்டு அழுததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். “யாழில் சமூக விரோத செயற்பாடுகளில் ஆவா குழு ஈடுபட்டு வருகின்றது. இந்த குழுவானது தெற்கில் இருக்கும் பாதாள குழுக்களை போன்று அல்ல.

ஆவா குழுவோடு தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தென்னிந்திய திரைப்படங்களை பார்த்தே இவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆவா குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

எவ்வாறாயினும், வடக்கில் சமூக விரோத செயற்பாடுகளில் ஆவா குழுவினர் தீவிரவாத அமைப்பு கிடையாது” என பிரதி அமைச்சர் நளின் பண்டார மேலும் கூறியுள்ளார்.