வெலிக்கடை பெண் கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்!

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட உள்ளனர்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு பிரதி அமைச்சர் சாரதி துஸ்மந்த நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறைச்சாலைகளில் வெலிக்கடை பெண் சிறைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் நிலவி வரும் நெரிசல் நிலையினால் பெண் கைதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

146 பெண் சிறைக் கைதிகளுக்கு மூன்று கழிப்பறைகளே காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியதனைத் தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதி அமைச்சர் சாரதி துஸ்மன்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.