வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அவசர அழைப்பு!

Report Print Murali Murali in பாராளுமன்றம்

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள வேண்டும் என அரசாங்கம் அவசர அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது.

பொலிஸ் சேவையில் அதிகளவான தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதுமபண்டார நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதை தமிழ் அரசியல்வாதிகள் ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், சந்தேகநபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கையில்,

“தமிழர்கள் பலர் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ளும் நோக்கில் ஏற்கனவே விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், வடக்கில் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், தென்னிந்திய சினிமா தாக்கத்தினால் இளைஞர்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றார்கள் என இதனை ஒதுக்கிவிட முடியாது எனவும் கூறியுள்ளார்.