யாழ். பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட மாட்டாது!

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட மாட்டாது என போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விமல் வீரவங்ச இன்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

பலாலி விமான நிலையம் எந்த வகையிலும் இந்தியாவுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது நடக்காது. தவறான பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம். நாங்கள் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அப்படி நடந்தால், நீங்கள் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவீர்களா என்று விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்படி நடந்தால், பார்த்துக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதில் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.