நாமல் குமாரவின் தகவலால் நாடாளுமன்றத்தில் அமளி

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக நாமல் குமார என்ற நபர் வெளியிட்ட தகவல் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் சூடான விவாதங்கள் இடம்பெற்றன.

சுமார் ஒரு மணிநேரம் இன்று இது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்தன. மேலும், நாடாளுமன்றில் கூச்சலிட்டதுடன் உணர்ச்சிப்பூர்வமான உரைகளும் நிகழ்த்தப்பட்டன.

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியின் குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன, நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 26 (2) கீழ் கேட்ட கேள்வி ஒன்று காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.