தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

நவம்பர் மாதம் 5ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பது என அமைச்சரவையில் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான குறைநிரப்புப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டம் நவம்பர் மாதம் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளது.

நவம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சுகவீனம் காரணமாக வெளிநாட்டு சிகிச்சைக்கு செல்வதனை தவிர வேறு எந்தவொரு தேவைக்காகவும், வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்துக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.