செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கியமான இரண்டு சட்டவரைவுகள்

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு மற்றும் நிதி ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு என்பன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டுவரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

இதேநேரம், 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்துக்கான, நிதி ஒதுக்கீட்டு சட்ட வரைவை நிதியமைச்சர் மங்கள சமரவீர அன்றைய தினம் சபையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

Latest Offers