மாற்று அரசுக்கு வாய்ப்பே இல்லை! கிரியெல்ல திட்டவட்டம்

Report Print Rakesh in பாராளுமன்றம்

மக்களால் நிராகரிக்கப்பட்ட குழுவால் ஆட்சியமைக்க முடியாது. அத்தகையை குழுவுடன் இணைய நாம் தயாரில்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும், பிரதமரும் நாட்டில் இல்லாத நிலையில், மாற்று அரசொன்றை அமைப்பதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகவும், இரண்டு அணிகள் இணையப் போவதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் மரிக்கால் எம்.பியால் நாடாளுமன்றில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதேவேளை, நல்லாட்சி அரசுக்கே மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களால் நிராகரிக்கப்பட்ட குழுவால் மாற்று அரசை அமைக்க முடியாது.

அவ்விரு அணிகளும் இணையும் என்று நாம் நம்பவில்லை என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers