நாடாளுமன்றில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும், தமக்கு சபையில் உரையாற்ற நேரம் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
கடந்த 10 மாதங்களுக்கு மேலாக சபையில் பேசுவதற்கு எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. எனக்கு நேரம் ஒதுக்கப்படுவதை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தவிர்த்து வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயற்படாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு சபையில் உரையாற்ற நேர ஒதுக்கீடு செய்ய முடியாது கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
தாம் தெரிவு செய்யப்பட்ட கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து சுயாதீனமாக செயற்படுவதாக அவர் அறிவிப்பாராயின், அவருக்கு சபாநாயகரினால் நாடாளுமன்றத்தில் நேரம் ஒதுக்கீடு செய்ய முடியும்.
அதுவே சம்பிரதாயமாகும். எனினும், இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடாக தெரிவான அவர், அதில் தொடர்ந்தும் நீடிப்பாராயின், கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட வேண்டும்.
இந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டத்திட்டங்களை அவர் பின்பற்றாவிட்டால், அவருக்கான நேரத்தை ஒதுக்கீ செய்ய முடியாது” என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன,
“நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த விடயத்தினை இரண்டாவது முறையாக சபையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்
இந்நிலையில், தம்மைத் தெரிவுசெய்த மக்களின் சார்பில் தமது கருத்துக்களை முன்வைக்க குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தர்ப்பத்தைக் கோருகிறார்” எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.