மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பினை அதிகரிக்க முடியும்

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பினை அதிகரிக்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்தவிற்கு உயிர் அச்சறுத்தல் காணப்பட்டால் பாதுகாப்பினை அதிகரிக்க முடியும். மஹிந்த ராஜபக்சவிற்கு ஏற்கனவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மெதமுலன, கார்ல்டன் மற்றும் விஜேராம இல்லங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மஹிந்தவின் பாதுகாப்பினை உயர்த்த வேண்டும் முக்கிய பிரபுக்களின் பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

Latest Offers