நாடாளுமன்ற அமர்வுகளை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைப்பதற்கு திட்டம்!

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

நாடாளுமன்ற அமர்வுகளை ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட உள்ளார்.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் நாடாளுமன்ற அமர்வுகளை தற்காலிகமாக ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான கால அவகாசத்தை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு அரசாங்கம் அவை நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers