கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசியக் கட்சி?

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்படும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி ஆங்கில ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும், புதிய அரசாங்கம் ஆட்சியை நிறுவியதன் பின்னர் நாடாளுமன்றை கலைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசாங்கம் முதல் நடவடிக்கையாக நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிக்கும் என தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் நாடாளுமன்றை கலைப்பது குறித்த யோசனையொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கூட்டு எதிர்க்கட்சி அல்லது மஹிந்த ஆதரவு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தரப்பு இந்த யோசனையை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சியினது ஆதரவும் கிடைக்கப்பெறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.