நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப காட்சிகள்!..

Report Print Sujitha Sri in பாராளுமன்றம்

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்ததுடன், அமர்வு பகல் 1.30 மணியளவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகின்றது.

சபாநாயகர் ஆசனத்தை சுற்றிவளைத்துள்ள மகிந்த அணியினர் அமர்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், நாடாளுமன்றில் கூரிய ஆயுதங்கள் வைத்திருந்தவர்களை கைது செய்யுமாறும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ சபாநாயகருக்கான ஆசனத்திலும் அமர்ந்துள்ளார்.

Latest Offers