நாடாளுமன்றத்தில் அட்டகாசம் செய்தவர்களுக்கு ஆபத்து!

Report Print Vethu Vethu in பாராளுமன்றம்

அண்மையில் நாடாளுமன்ற அமர்வின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தற்போது 5 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வெலிக்கடை பொலிஸாருக்கு 4 முறைப்பாடுகளும், பொலிஸ் தலைமையகத்திற்கு ஒரு முறைப்பாடு கிடைத்துள்ளன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், காமினி ஜயவிக்ரம பெரேரா, மரசிங்க, இந்திக்க பெரேரா மற்றும் அமைச்சர் விமல் வீரவன்சவினால் இது தொடர்பான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு சபாநாயகரின் அனுமதியும் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்பு கமராக்களின் உதவியுடன், குற்ற விசாரணையின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

Latest Offers