இடைக்கால கணக்கு அறிக்கை இன்று நாடாளுமன்றில் தோல்வி அடைந்தால் என்ன நடக்கும்?

Report Print Vethu Vethu in பாராளுமன்றம்

இலங்கையில் சர்ச்சைக்குரிய வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கம் இடைக்கால கணக்கு அறிக்கையை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.

நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாத மஹிந்த அரசாங்கம் கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.

இந்நிலையில் இடைக்கால கணக்கறிக்கை தோல்வியடைந்தால் அரசாங்கம் கலைக்கப்படலாம் என்ற கருத்து வெளியாகி உள்ளது.

எனினும் இடைக்கால கணக்கு அறிக்கை தோல்வி அடைந்தால், நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் சட்டம் ஒன்று இல்லை என சட்டத்தரணி பேராசிரியர் பிரதீபா மஹானாம ஹேவா தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தின் முதல் 4 மாதங்களுக்காக இடைக்கால கணக்கறிக்கை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

அது நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தால் என்ன நடக்கும் என்பது தொடர்பில் சட்டத்தரணியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அரசியலமைப்பிற்கு அமைய வரவு செலவுத் திட்டம் தோல்வியடையும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் ஒன்று கலைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

எனினும் இடைக்கால கணக்கறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அது நாடாளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு தோல்வியடைந்தால் அரசாங்கம் கலைவதற்கு சட்டம் ஒன்று இல்லை.

அது இடைக்கால கணக்கறிக்கை என்பதனால் அவ்வாறு அரசாங்கம் கலையானதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers