இன்றும் ஏமாற்றிய மஹிந்த தரப்பு! உச்சகட்ட கடுப்பில் சபாநாயகர்

Report Print Vethu Vethu in பாராளுமன்றம்

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதில்லை ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பான தகவல்களை அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற அமர்வினையும் ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முற்றாக புறக்கணித்திருந்தார்கள்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய சபாநாயகர் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, ஆளும்தரப்பு உறுப்பினர்கள் சபை நடவடிக்கையை புறக்கணித்து வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து இன்று விவாதம் இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers