மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய பிரேரணை

Report Print Shalini in பாராளுமன்றம்

பிரதமர் அலுவலக்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் சட்டமூலத்தை முடக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் நாடாளுமன்றில் நடத்தப்பட்டது.

இதில் குறித்த பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு விஜயதாச ராஜபக்ஸ மற்றும் அத்துரலிய தேரர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

மேலும், ஐக்கிய தேசிய முன்னணி , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இதேவேளை , நாடாளுமன்ற அமர்வு நாளை முற்பகல் 10.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Latest Offers