விசாரணைக்காக குழுவை நியமித்தார் சபாநாயகர்

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகிய நாட்களான கடந்த 14, 15ஆம் திகதிகளில் நடந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த குழு ஒன்றை நியமித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று ஆரம்பமாகிய போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு கூடியது, ஆளும் கட்சியினர் நாடாளுமன்ற கூட்டத்தை பகிஷ்கரித்திருந்தனர்.

எனினும், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத காரணத்தில் ஆளும் கட்சி என கூறி கொள்ளும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் நாடாளுமன்றத்தை பகிஷ்கரித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Latest Offers