ஆளும் கட்சி பங்கேற்காத நாடாளுமன்ற அமர்வுகள்! இத்தனை கோடி ரூபாய் செலவா?

Report Print Vethu Vethu in பாராளுமன்றம்

சர்ச்சைக்குரிய முறையில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளுக்காக இரண்டு கோடி 60 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிதி பிரிவு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெறும் சந்தர்ப்பத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நான்கு தடவைகள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.

கடந்த மாதம் 23ம் 27ம் 29ம் 30ம் திகதிகளில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளை ஆளும் கட்சியினர் புறக்கணித்திருந்தனர்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள், இறுதி 4 நாட்களான 23,27,29 மற்றும் 30 ஆம் திகதிகளில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணித்தனர்.

அதற்கமைய எதிர்ககட்சி உறுப்பினர்கள் மாத்திரமே நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.

அதற்கமைய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சம்பள கொடுப்பனவு, எரிபொருள், மின்சாரம், உணவு மற்றும் குடிபானங்களுகாக இந்த பணம் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிதி பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதிப்பிட்டு பார்த்தால் நாள் ஒன்றுக்கு 65 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.