நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல்

Report Print Vethu Vethu in பாராளுமன்றம்

கடந்த 15ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மோதலில் ஈடுபட்ட உறுப்பினர்களின் சம்பளத் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மோதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியமை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது மிளகாய் தூள் தாக்குதல் நடத்தியமை, சபாநாயகரின் பணிகளை மேற்கொள்ள இடமளிக்காமை, சபாநாயகரின் பாதுகாப்பிற்கு வந்த பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் சம்பளம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியமை நாட்டிலும் சர்வதேசத்திலும் இலங்கை தொடர்பில் விமர்சனம் எழுந்திருந்தது.

இந்த தவறான எடுத்துக்காட்டு மற்றும் எதிர்வரும் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்காக உறுப்பினர்களின் சம்பளத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்ற விசாரணை திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

Latest Offers