இன்று வெற்றிபெற்றார் ரணில் விக்ரமசிங்க

Report Print Murali Murali in பாராளுமன்றம்

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடிய நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச இந்த பிரேரணையை கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வாக்களித்திருந்தன.

எனினும், மக்கள் விடுதலை முன்னணி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், வாக்களித்த அனைவருக்கும் ரணில் விக்ரமசிங்க சபையில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் ஒரு மணி வரையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.