5000 ரூபாயில் பதவிப்பிரமாணம்! யாருக்கும் தெரியாமல் மைத்திரி.. நாடாளுமன்றில் அம்பலம்

Report Print Sujitha Sri in பாராளுமன்றம்

ஜே.வி.பியினால் கொண்டு வரப்பட்ட பிரேரணையை தாம் ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

19ஆம் அரசியலமைப்பிற்கு முன்னர் ஜனாதிபதி நினைத்தால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்ற நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, அவர் பதவியிலிருந்த போது அந்த பலத்தை இரு தடவை பிரயோகித்திருந்தார்.

எனினும் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை கலைத்து தான் தவறு செய்து விட்டதாக பதவியிலிருந்து விலகிய பின் அவர் கூறியிருந்தார்.

அந்த வகையில் 18ஆம் அரசியலமைப்பு கொண்டு வரப்பட்ட போது, ஆணையும் பெண்ணாக மாற்றலாம், பெண்ணையும் ஆணாக மாற்றலாம் என்ற விமர்சனம் காணப்பட்டது.

எனினும் 19ஆம் அரசமைப்பிற்கு பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. இந்த காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய அதிகாரத்தை தானே குறைத்து கொண்டு அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தார்.

அத்துடன் 5000 ரூபாய் செலவில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என அவர் தொடர்பில் பெருமை பேசிக் கொண்டோம். இப்படியெல்லாம் இருந்தவர் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி திடீரென யாருக்கும் தெரியாமல் பிரதமரை நியமித்தார்.

பதவி மற்றும் அதிகாரம் கிடைக்கும் போது நல்ல மனிதர் கூட எவ்வாறு மாறுகிறார் என்பதை இதன்மூலம் நாம் பார்த்துக் கொள்ள முடியும் என அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

Latest Offers