காபந்து அரசாங்கமாக செயற்பட வேண்டும்! அத்துரலியே ரத்தன தேரர்

Report Print Nivetha in பாராளுமன்றம்

தற்போது பெரும்பான்மை இல்லாத அரசாங்கமே உள்ளதாகவும், காபந்து அரசாங்கமாக செயற்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு இணங்கி அப்போது செயற்பட்டோம். எந்த எதிர்க்கட்சியில் இருந்தாலும், நாட்டினது நலனிற்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் குரல்கொடுப்போம் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, நிறைவேற்று அதிகாரத்தை நீக்கினால் அது நாட்டிற்கு செய்யும் துரோகம், இன்று ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.

இதற்கு இரு சாராரும் இணைந்து செயற்படவேண்டிய பல விடயங்கள் உள்ளன என்றும் அத்துரலியே ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.