நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!

Report Print Dias Dias in பாராளுமன்றம்

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தின் சிறந்த செயற்பாட்டாளர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் நாடாளுமன்றம் என்பது அதியுயர் சட்டவாக்க சபையாக காணப்படுகின்றது. இலங்கை நாடாளுமன்றம் 225 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

அந்த வகையில் கடந்த ஒக்டோபர் மாதத்தின் சிறந்த செயற்பாட்டாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், டக்லஸ் தேவானந்தா மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோர் முதலாம், இரண்டாம் மற்றும் நான்காம் நிலைகளாக தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த தரப்படுத்தல் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளுதல், மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றுதல், மக்களது நன்மை கருதி கேள்விகளை தொடுத்தல் போன்ற நாடாளுமன்ற செயற்பாடுகளை கொண்டு கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.