நாடாளுமன்றில் சூடுபிடிக்கும் மனித புதைகுழி விவகாரம்!

Report Print Nivetha in பாராளுமன்றம்

மன்னார் மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டு அவர்களின் மரணங்கள் ஆராயப்பட வேண்டும் என்று நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மன்னார் புதைக்குழி விவகாரம் வெறும் கண்காட்சியாகிவிடாது, உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மன்னார் மனிதப் புதைகுழி விடயத்தில் சட்டம் உரிய முறையில் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அதுமாத்திரமின்றி குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நேற்றைய தினம் மன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சபையில் வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers