புதிய அரசியலமைப்பு சட்டத்தின் ஊடாக நாடு காட்டிக்கொடுக்கப்பட மாட்டாது: ரணில்

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக நாட்டை காட்டிக் கொடுக்க போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சபை இன்று நாடாளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்ட வழிக்காட்டல் குழுவின் யோசனைகளை பிரதமர், சபையில் சமர்ப்பித்துள்ளார்.

பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையோ ஒற்றையாட்சி என்ற பதமோ புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் மாற்றப்பட மாட்டாது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers