குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அபிவிருத்தி பணி பற்றி தெரியாது

Report Print Gokulan Gokulan in பாராளுமன்றம்

கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்துகொண்டு பார்க்கும் அரசியல்வாதிகளுக்கு, வடக்கில் எதனை அபிவிருத்தி செய்ய வேண்டும், எங்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தெரியாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு மக்களுக்கு இருப்பது சாதாரணப் பொருளாதார பிரச்சினை என தெற்கில் உள்ளவர்கள் மதிப்பிடுகின்றனர்.

வடக்குக்கு அபிவிருத்தி அவசியம் என்றே, வடபகுதி மக்கள் விரும்புகின்றனர்.

எனவே, வடக்கில் அபிவிருத்திப் பணிகளை பூரணமாக முன்னெடுக்க அங்கு முழுமையாக நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

அன்று, பண்டாரநாயக்க காலத்தில் சமஷ்டி குறித்து பேசப்பட்ட போது, சமஷ்டியானது அதிக நன்மை பயக்கும் என்பதை கருத்திற் கொண்டே தெற்கு அரசியல்வாதிகள் அதனை எதிர்த்தனர் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers