வெட்கித்து தலைகுனிகின்றேன்! மகிந்த

Report Print Murali Murali in பாராளுமன்றம்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை நாட்டிற்கு அழைத்துவர முடியாமல் போனமையை இட்டு தான் வெட்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்று நான்கு வருடங்கள் ஆகின்றன. எனினும், அர்ஜுன் மஹேந்திரனை இது வரையிலும் அழைத்துவர முடியாமல் போயுள்ளது. இது குறித்து வெட்கப்பட வேண்டும்.

அரசாங்கம் துருக்கியுடன் மேற்கொண்டுள்ள ஆட்களை மீள ஒப்படைத்தல் உடன்படிக்கைபோன்று சிங்கப்பூருடனும் மேற்கொண்டு, மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபரான அர்ஜுன் மஹேந்திரனை அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதன் மூலமே ஐக்கிய தேசிய கட்சிக்கும் குற்றச்சாட்டுக்களில் இருந்து தூய்மையாக முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers