போதிய உறுப்பினர்கள் இல்லாமல் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Report Print Murali Murali in பாராளுமன்றம்

போதியளவு உறுப்பினர்கள் இல்லாததன் காரணமாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஐந்தாம் திகதி வரையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரி ஒத்திவைப்பு பிரேரணை நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவினால் கொண்டு வரப்பட்ட போதிலும் போதிய உறுப்பினர்கள் இன்மை ஆளும் கட்சியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers