நாடாளுமன்றத்திற்குள் மிளகாய் பொடி கொண்டு வந்தது எப்படி? விசாரணையில் வெளியான தகவல்

Report Print Vethu Vethu in பாராளுமன்றம்

மஹிந்த தரப்பினரால் நாடாளுமன்றத்திற்குள் மிளகாய் பொடி கொண்டு வரப்பட்டது எப்படி என்பது தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு உறுப்பினர் தங்கள் பாதணியில் மறைத்து வைத்து மிளகாய் பொடியை கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர் மிளகாய் பொடி கொண்டு வந்தமை, நாற்காலியில் தாக்குதல் மேற்கொண்டமை, சபாநாயகர் உரையாற்றும் மைக்ரோ போனை உடைத்தமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது.

உறுப்பினர்கள் இருவர் தங்கள் பாதணியினுள் மறைத்து நாடாளுமன்றத்திற்கு மிளகாய் பொடி கொண்டு வரப்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது.

கடந்த மாதம் நாட்டில் நிலவிய அரசியல் சதிப் புரட்சியின் ஒரு அங்கமாக நாடாளுமன்றத்தில் வன்முறைகள் வெடித்திருந்தன. இதன்போது கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் இருவர் மிளகாய் பொடியை கொண்டு வந்து உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த விவகாரம் நாடளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.