நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பரபரப்பு! உயிர் தப்பிய உறுப்பினர்கள்

Report Print Vethu Vethu in பாராளுமன்றம்

நாடாளுமன்றத்திற்குள் சில உறுப்பினர்கள் உயிருக்கு போராடியதாக சபையில் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று நாடாளுமன்ற லிப்டில் சிக்கியதாக வீரவன்ச தெரிவித்துள்ளார்.

12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 15 நிமிடங்கள் லிப்டில் சிக்கியிருந்தாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் நாடாளுமன்றம் கூடிய போது விமல் வீரவன்ச இதனை சபாநாயகரிடம் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் நாடாளுமன்ற லிப்டில் சிக்கியிருந்தோம், அவசர அழைப்பு மேற்கொண்டு 15 நிமிடங்களாகியது” என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அது குறித்து வருத்தப்படுகின்றேன்.. ஆராய்ந்து பார்க்கின்றேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

வருத்தப்பட்டு சரியாகாது. இன்னும் சற்று நேரமாகியிருந்தால் எமது மூச்சு நின்று போயிருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.