35 வருட பழமையான லிப்டிக்குள் சிக்கிய மஹிந்தவின் சகாக்கள்! புதிய நடைமுறை அறிமுகம்

Report Print Vethu Vethu in பாராளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் பயணித்த மின்சார லிப்ட் இடையில் சிக்கியமை அடுத்து புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரே நேரத்தில் அதில் பயணிக்க கூடியவர்களின் எண்ணிக்கையை 6 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த லிப்டில் 13 பேர் பயணிக்க கூடிய போதிலும் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது 12 உறுப்பினர்கள் பயணித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மின்சார லிப்ட் திடீரென இயங்காமையினால் அதில் பயணித்த 12 பேர் 15 நிமிடங்களாக அதனுள் சிக்கியிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆறாவது லிப்ட்டே இவ்வாறு செயலிழந்துள்ளது.

இரண்டாவது மாடியில் உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக குறித்த உறுப்பினர்கள் இந்த லிப்டிலில் ஏறிய போது, இரண்டாவது மாடி வரை பயணித்த பின்னர் இந்த நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள அனைத்து லிப்ட்களும் 35 வருடங்கள் பழைமையானவை எனவும், அதனை பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.