துஷ்பிரயோக குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில்

Report Print Abdulsalam Yaseem in பாராளுமன்றம்

பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வலபன, வதுமுல்ல பகுதியைச் சேர்ந்த நாயகம் முரளிதரன் (49 வயது) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.