நாடாளுமன்ற மின்னுயர்த்திக்குள் சிக்கியவர்கள் ஏன் சாகவில்லை! சபிக்கும் நாட்டு மக்கள்

Report Print Vethu Vethu in பாராளுமன்றம்

நாடாளுமன்ற மின்னுயர்த்திக்குள் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்படியே உயிரிழந்திருக்கலாம் என நாட்டு மக்கள் எண்ணுவதாக இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்டு வரும் மோசடிகள் காரணமாக மக்கள் எங்கள் மீது சாபமிடுகின்றனர். அந்தளவுக்கு மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். இந்நிலையை மாற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்ற மின்னுயர்த்தியினுள் சிக்கிய 12 உறுப்பினர்களையும் ஏன் காப்பாற்றினார்கள். அதற்குள்ளேயே விட்டு சாகடித்திருக்கலாம் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கோப் குழு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மின்னுயர்த்தியினுள் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கிக்கொண்டமை தொடர்பில் இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகள் வரை பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இங்குள்ள சமூக வலைத்தளங்களை பார்த்தால் நாடாளுமன்ற மின்னுயர்த்தியினுள் சிக்கிய 12 உறுப்பினர்களையும் ஏன் காப்பாற்றினார்கள் ? அதற்குள்ளேயே விட்டு சாகடித்திருக்கலாம். வீணாக காப்பாற்றிவிட்டார்கள், மின்னுயர்த்தி செயலிழந்து நிற்காமல் அறுந்து விழுந்திருக்கலாம் என மக்கள் சபித்துள்ளனர்.

Latest Offers