முல்லைத்தீவில் ஏற்படும் திடீர் தீ அனர்த்தங்களுக்கு தீயணைப்பு பிரிவு அவசியம்!

Report Print Dias Dias in பாராளுமன்றம்

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு தீயணைப்பு பிரிவு அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு தீயணைப்பு பிரிவு இல்லாத நிலையில் தான் மாவட்டம் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த மாவட்டங்களில் தீ அனர்த்தம் ஏற்பட்டால் வவுனியாவில் இருந்து தீயணைப்பு பிரிவு வந்துதான் உதவிகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து பல தடவைகள் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.