கையில் கட்டுடன் வந்த தொண்டமான்! நலன் விசாரித்த மகிந்த

Report Print Murali Murali in பாராளுமன்றம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கையில் கட்டுடன் இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்திருந்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாடாளுமன்றம் நேற்று கூடியது.

இதன்போது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கையில் கட்டுடன் இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்திருந்தார்.

இதனையடுத்து சபை அமர்வுகள் ஆரம்பிக்க முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் தொண்டமன் மற்றும் ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் நீண்ட நேரமாக உரையாடிக்கொண்டிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொண்டமானின் இடது கையில் கறுப்புத் பெண்டேச் கட்டியிருந்ததை அவதானித்த பல எம்.பிக்களும் அவரிடம் நலம் விசாரித்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷவும் கையை காண்பித்து தொண்டமானிடம் வினாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...