படையினருக்கு ஏன் 393 பில்லியன் நிதி? சபையில் சிறீதரன் எம்.பி கேள்வி

Report Print Murali Murali in பாராளுமன்றம்

நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவுவதாக கூறிக்கொண்டு பாதுகாப்பு படைக்கு ஏன் 393 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பினார்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான முதல் நாள் விவாதம் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“வடக்கு கிழக்கில் திறந்த வெளி சிறைச்சாலையில் மக்களின் சொந்த நிலைகளை விடுவிக்க முடியாத, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முடியாத நிலையில் இராணுவத்தை ஏன் பலப்படுத்த வேண்டும்.

சமாதான காலத்தில் ஏன் பாதுகாப்புக்கு இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்ட வேண்டும். ஆகவே இது யுத்த வரவு-செலவு திட்டமாகும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers