இந்த நாடு மீண்டுமொரு யுத்தத்திற்கு தயாராகின்றதா? சபையில் கேள்வி எழுப்பிய தமிழ் எம்.பி

Report Print Jeslin Jeslin in பாராளுமன்றம்

இந்த நாட்டில் தற்போது யுத்த சூழல் இல்லாதபோதும்கூட அரசாங்கம் நாட்டின் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளமைக்கான காரணம் என்னவென மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 17 வீதமான நிதி பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. கல்விக்கு 4.54 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது, சுகாதாரத்திற்கு 8.11 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த நாடு மீண்டுமொரு யுத்தத்திற்கு தயாராகின்றதா என நான் கேட்க விரும்புகின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,