5 மாதங்களுக்கு ஜனாதிபதியின் செலவிற்காக 13.56 பில்லியன் ரூபாய்

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

5 மாதங்களுக்கு ஜனாதிபதியின் செலவிற்காக 13.56 பில்லியன் ரூபாய் நிதி இம்முறை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

வரவு செலவு திட்டத்தில் பிரதமருக்கு 1.1 பில்லியன் ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் 5 முதல் ஆறு மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு 13.56 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால், குழு நிலை விவாதத்தின் போது, ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து எண்ணி பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers