இன்றைய நாடாளுமன்றில் தீர்மானமிக்க சக்தியாக மாறவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Report Print Jeslin Jeslin in பாராளுமன்றம்

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த 5ஆம் திகதி முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானமிக்க சக்தியாக செயற்படவுள்ளது என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர், 14 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இந்த வாக்கெடுப்பில் தாக்கம் செலுத்தவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அரசியல் பிரமுகர்கள், இந்த வரவு செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர் கருத்தாடல்களை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு வரவு செலவுத் திட்டத்தின் வெற்றிக்கு மிக அத்தியாவசியமாகின்றது.

Latest Offers