நாடாளுமன்றில் அத்துரலியே ரத்தன தேரர் விடுத்த முக்கிய கோரிக்கை

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்

மாணவர்கள் முதலாம் ஆண்டில் இருந்து ஐந்தாம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் கற்பதை தடைசெய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற விவாதத்தின் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

சிறுவர்களுக்கு ஆரம்பக்கல்வியானது தமது தாய்மொழியில் தரப்படவேண்டும். எனினும், இலங்கையில் மாத்திரமே வேறு எந்த நாட்டிலும் பின்பற்றப்படாத முறையாக ஆங்கிலம் ஆரம்பக்கல்வியாக பயிற்றுவிக்கப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தமது தாய்மொழியை தவிர வேறு மொழியில் ஆரம்பக்கல்வி புகட்டப்படுமானால் அந்த சிறுவன் அல்லது சிறுமி, அந்த நாட்டின் பிரஜையாக கருதப்படமாட்டார்.

எனவே சர்வதேச பாடசாலைகளின் கல்விமுறையை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றும் அத்துரலியே ரத்தன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Offers