கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைத்து தாருங்கள்! கூட்டமைப்பு கோரிக்கை

Report Print Murali Murali in பாராளுமன்றம்

அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைப்பு செய்வதற்கு இந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

வரவு செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“அம்பாறை மாவட்டத்தின் முக்கியமான சில இடங்களில் யானை பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாமல் இருக்கின்றன. 125 கிலோ மீற்றர் தூரத்திற்கு யானை பாதுகாப்ப வேலிகள் அமைக்கப்பட வேண்டியுள்ளது.

யானை வேலிகள் அமைக்கப்படாமையின் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், பொது மக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

ஆகையினால் இந்த விடயம் குறித்து உரிய தரப்பினர்கள் கவனம் எடுத்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Offers