பணம் கொடுத்து எமது மக்களை ஏமாற்ற நினைக்க வேண்டாம்! பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்

Report Print Nivetha in பாராளுமன்றம்

பணம் கொடுத்து எமது மக்களை ஏமாற்றி விடலாம் என்று ஒரு போதும் இந்த அரசு நினைத்து விடக் கூடதாது என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நீண்ட காலமாக அரசியல் கைதிகயாக சிறையில் வாடும் தமிழ் உறவுகளின் குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கோரிக்கை விடுத்துள்ளார்.